fbpx
Homeபிற செய்திகள்பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தேசிய மாநாடு

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தேசிய மாநாடு

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம் மாள் மகளிர் கல்லூரியின் கணினி அறிவியல் துறை, “செயற்கை நுண்ணறிவு, இணைய பொருட்கள் (IoT) மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சி” என்ற தலைப்பில் ஒரு தேசிய மாநாட்டை 23ம் தேதி கல்லூரியின் பொன்விழா அரங்கில் ஏற்பாடு செய்தது.

மாநாடு, பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி யின் முதல்வர் டாக்டர் பி. பி. ஹாரதி வரவேற்புரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, NASSCOM, சென்னை இயக்குநர் உதய சங்கர் சிறப் புரை ஆற்றினார்.

அவர் செயற்கை நுண்ணறிவு, இணைய பொருட்கள் (IoT) மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுவரும் வேகமான முன்னேற்றங்களை எடுத்துரைத்து, அவை தொழில்துறை மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களை விளக்கினார்.

மேலும், ஒருங்கிணைந்த தொழில் நுட்பங்களில் செயல்படக்கூடிய திறமையான மனிதவளத்தின் தேவை அதிகரித்து வருவதை வலியுறுத்தி, மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து தங்களை மேம்படுத்திக் கொண்டு தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப தங்களது அறிவை ஒத்திசைக்க வேண்டும் என ஊக்கமளித்தார்.

மாநாட்டின் போது மாநாட்டு செயல்முறை நூல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

தொழில்நுட்ப அமர்வுகள் பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் டி. அமுதா, இன்ஃபோசிஸ், கோயம் புத்தூரின் மூத்த ஆலோசகர் டாக்டர் ஐஸ்வர்யா சுந்தரம் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த எக்ஸ் ஆர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் குமார் ஆகியோரால் நடத்தப்பட்டன.

அவர்கள் IoT அமைப்புகளில் உருவாகி வரும் போக்குகள், ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் தொழில்துறை சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக பேசினார்கள். இது பங்கேற்பாளர்களுக்கு பயனுள்ள அறிவை வழங்கியது.

மேலும், கல்லூரியின் பெருமைக்குரிய முன்னாள் மாணவிகளான அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி பிரவீணா மற்றும் சிடிஎஸ், கோயம்புத்தூரின் தொழில்நுட்ப தலைவி செல்வி நந்தினி கந்தசாமி ஆகியோர் Tech Talk
அமர்வை நடத்தி மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர். மாநாட்டின் நன்றியுரையை தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் சோஃபியா ரீனா வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img