கோவை ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத் தில் மறைந்த முன்னாள் முதல்வர்டாக்டர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா திமுக வழக்கறிஞர் அணி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கோவை மாநகர மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன் தலைமை தாங் கினார். விழாவிற்கு திமுக மாநில சட்டத்துறை இணை செயலாளர்கள் பி. ஆர்.அருள்மொழி, கே.எம். தண்டபாணி, அரசு வழக்கறிஞர்கள் ரவிச்சந்தி ரன், அருண்குமார் கிருஷ் ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர்
இந்த விழாவில் கோவை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் மருது பாண்டியன் கோவை வழக்கறிஞர்கள் அணி துணைத்தலைவர் மணிவேல் துணை அமைப்பாளர்கள் விக்ரம் சலாவுதீன் எலிசபெத் ராணி ஆசைத்தம்பி மற்றும் வழக்கறிஞர்கள் ராஜேந் திரன் ரவிச் சந்திரன் தமிழ்ச் செல்வி மணி மேகலை சுந்தர்ராஜ் உள்பட 500 க்கு மேற் பட்டவர்கள் கலந்து கொண்டனர்
முன்னதாக கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஆயிரம் பேருக்குவழக்கறிஞர்கள் அணி சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.