fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சர்வதேச தரத்திற்கான கார் அருங்காட்சியகம் திறப்பு- நாளை முதல் பொதுமக்கள் பார்க்கலாம்

கோவையில் சர்வதேச தரத்திற்கான கார் அருங்காட்சியகம் திறப்பு- நாளை முதல் பொதுமக்கள் பார்க்கலாம்

2013 ஆம் ஆண்டு இந்திய கார்களுக்காகப் பிரத்யேகமான இந்திய கார் பிரிவு ஜிடி கார் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைககு துவக்கி வைக்கப்பட்டது. அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி அருங்காட்சியகம் பர்ஃபார்மன்ஸ் கார் பிரிவு எனப்படும் புதிய பகுதியை சேர்த்துள்ளது.

இந்தப் பிரிவில் ஸ்போர்ட்ஸ் கார்கள், சூப்பர் கார்கள் றீuஜ்uக்ஷீஹ் கார்கள் மற்றும் ரேஸ் கார்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

இதில் லாம்போர்கினி, ஃபெராரி, மெசுலாரன், லோட்டஸ், மசெராட்டி, அஸ்டன் மார்டின், மாஸ்டா, போர்ஷே பாகாஸ்டர், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் போன்ற புகழ்பெற்ற வாகனங்களும் அடங்கும்.

இங்கு புகழ்பெற்ற புகழ்பெற்ற கார் பந்தய வீரர் கரிவரதன் உருவாக்கிய முதல் ரேஸ் கார் Ford GT40, , மேலும் LGB Rolon, MRF 1600, MRF 2000 போன்ற பல்வேறு ரேஸ் கார்களும் இடம்பெற்றுள்ளன.

கோவை மோட்டார் விளையாட்டு துறைக்கு வழங்கிய சிறப்பான பங்களிப்புகளான ஆட்டோ காம்போனென்ட்ஸ், கோ-கார்ட் ஃபார்முலா ரேஸ் கார்கள், ரேஸ் டிராக்குகள், மோட்டார் விளையாட்டு அணிகள், பண்பாடு மற்றும் பாரம்பரியம்“ ஆகியவற்றை இந்தப் பிரிவு வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த பிரிவு நாளை (அக்டோபர் 17) முதல் மக்களுக்காக துவங்க உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img