கோவை ரெசிடென்சி ஹோட்டலில் நகைகள் வடிவமைப்பு நிபுணர் அபர்ணா சுங்கு வடிவமைப்பில் உருவான கைவினை நகைகள் மற்றும் திருமண நகைகள் கண்காட்சி இன்று (8 -ந் தேதி) தொடங்கியது
வருகிற 10-ம் தேதி முடிய நடைபெறும் இந்த கலாஷா நகைகள் கண்காட்சியை சீமா செந்தில் (இயக்குனர் – ரத்தினம் குழுமம்), லட்சுமி மோகன் (நிர்வாக இயக்குனர் – பிரிக்கால் ஹோல்டிங்), புவனா சதீஷ் (ஸ்பார்க்லர்ஸ் பேட்மின்டன் அகாடமி உரிமையாளர்), கீர்த்தனா மனோஜ் ( இயக்குனர் – கார்த்திகை டெக்ஸ்டைல் மில்ஸ்), அட்வ் முருகம்பாள் சுந்தரவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்
இது குறித்து அபர்ணா சுங்கு கூறும்போது, “இந்த கண்காட்சி 8,9,10 ஆகிய 3நாட்கள் நடக்கிறது.
கண்காட்சி தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது” என்று கூறினார்.