fbpx
Homeபிற செய்திகள்எமரால்டு நிறுவனம் அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் கழிப்பறை கட்டிடம் கட்டி உதவி

எமரால்டு நிறுவனம் அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் கழிப்பறை கட்டிடம் கட்டி உதவி

எமரால்டு நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் திட்டத்தின் மூலம் கிரிஷா அறக்கட்டளை சார்பாக அரசு தொடக்கப்பள்ளி அசோகபுரத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

எமரால்டு நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் மூலம் சமூக முன்னேற்றப் பணியின் 10வது அரசு பள்ளியாக இப்பள்ளி அமைந்துள்ளது. 

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பவன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுகாதார முக்கியத்துவம் குறித்து சிறப்புரை வழங்கினார். 

எமரால்டு நிறுவனத்தின் தலைவர் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் விழா பேருரை வழங்கினார். எமரால்டு நிறுவனம் சார்பாக செய்யப்படும் கிராம முன்னேற்ற பணிகள் குறித்து விளக்கினார். எமரால்டு மருத்துவ நலமையத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வாழ்த்துரை வழங்கினார். எமரால்டு நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் திட்டத்தின் மேலாளர் தினேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.

எமரால்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், 

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தின் வட்டார கல்வி

அலுவலர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். இறுதியாக பள்ளியின் ஆசிரியை பொற்கொடி நன்றியுரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img