செய்தியாளர் பயணத்தில் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித் ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்க ளால் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் போதுமான அளவிலான நிதி ஆதாரங்களை உருவாக்கிதந்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஒரு திருப்புமுனைத் திட்டமாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் எனும் உன்னத திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு கிராம ஊராட்சிகளுக்கு போதிய வருவாய் ஆதாரங்களை ஏற்படுத்துவதும், உட்கட்டமைப்பு வசதிகளை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தனி நபர் வருமானம் குறைவாக உள்ள கிராம ஊராட்சிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகளான சாலை வசதி,குடிநீர் வசதி, தெரு விளக்கு,ஃபேவர் பிளாக் மற்றும் தார்சாலை, சுடுகாடு, அங்கன்வாடி மைய கட்டடம், கழிவுநீர் கால்வாய் வசதி போன்றவற்றினை மேம்படுத்துவதற்கும்,கிராம ஊராட்சிகளில் பொருளா தார முன்னேற்றத்திற்கு தேவையான மீன்சந்தை, சமையலறை கொட்டகை, நீர்பாசன தொட்டி,குளம் மற்றும் ஊருணி,கதிரடிக்கும் களம்,ஊராட்சிமன்ற அலுவலக கட்டடம், சந்தை, விளைபொருள் சேமிப்புக்கூடம் போன்றவற்றை ஏற்படுத்திட முன்னுரிமை அளிக்கப்படும். இதனடிப் படையில், ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு வட்டாரத்திலும், ஐந்தில் ஒரு பங்கு கிராம ஊராட்சிகளில் தனி நபர் வருமானத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி ஒவ்வொரு மாவட்டம் வட்டார அளவில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
கிராம ஊராட்சிமன்றத் தலைவர்,வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி), சம்பந்தப் பட்ட உதவிப் பொறியாளர் (ஊ.வ.)ஒன்றியப் பொறியாளர், சம்பந்தப் பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் மூலம் கிராமத்திற்கு வரையறுக்கப்பட்ட நிதி பிரிவிலிருந்து ஒரு குளம் ஊரணி குட்டைகள் ரூ.3 இலட்சம் முதல் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டிலும்,பள்ளிகளில் விளையாட்டு மையங்கள் ரூ.1.5 இலட்சம் மதிப்பீட்டிலும், சமுதாய விளையாட்டு மையங்கள் ரூ.1 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 3,095 பணிகளில் 3,092 பணிகள் ரூ.207.16 கோடி மதிப்பீட்டில் கடந்த 4 ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆதிநாராயண புரம் அங்கன்வாடி மையத்தில் தினசரி குழந்தைகள் வருகை பதிவேடு, எடை மற்றும் ஊட்டச்சத்து விகிதம் குறித்து பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட் டவற்றை ஆய்வு செய்து, அங்கன்வாடி மைய பணியாளர்கள் குழந்தைகள் பராமரிப்பில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



