fbpx
Homeபிற செய்திகள்ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கம் துவக்க விழா

ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கம் துவக்க விழா

கோவை மாவட்டம், காரமடை வட்டாரம் சி.சி.2473 காரமடை வட்டார ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க துவக்க விழா நடைபெற்றது.

இச்சங்கத்தை பதிவு செய்ததற்கான சான்றிதழை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் வழங்கினார். மேலும் தலைவர், துணைத்தலைவர் மற்றும் இயக்குனர்களை நியமனம் செய்தும் சிறப்புரையாற்றினார்.

ஆசிரியர் கூட்டணி

இவ்விழாவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மூ.மணிமேகலை குத்துவிளக்கேற்றினார். கோவை சரக கூட்டறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் கே.ஆர்.விஜயகணேஷ் வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் சங்கத்தின் தலைவர் ரா.கனகராஜ், துணைத் தலைவர் சி.நாராயணசாமி, நகர மன்ற துணைத்தலைவர் அருள்வடிவு, மா.பாபு, சி.சந்திரகுமார், ரா.சிவக்குமார், வெ.மணிகண்டன், அ.தங்கபாசு, ஜி.நடராஜன், எம்.குணவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img