fbpx
Homeபிற செய்திகள்“கண்ணை நம்பாதே” திரைப்படம் வெளியீட்டு விழா: பார்வையற்றறோருக்கு நலஉதவிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின் மன்றம்

“கண்ணை நம்பாதே” திரைப்படம் வெளியீட்டு விழா: பார்வையற்றறோருக்கு நலஉதவிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின் மன்றம்

இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த “கண்ணை நம்பாதே” திரைப்படம் வெளியீட்டு விழாவில் 100 க்கும் மேற்பட்ட பார்வை யற்றோருக்கு மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கழக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “கண்ணை நம்பாதே” திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று வெளியானது.

ரசிகர் மன்றம்

கோவை சாந்தி திரையரங்கில் இப்படம் வெளியீட்டு விழாவை கொண்டாடும் விதத்தில், கோவை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் 100 க்கும் மேற்பட்ட பார்வையற்றோர்களுக்கு அரிசி உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை இளைஞரணி துணை அமைப்பாளர் கிஸ்கால் ராஜா, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் மாவட்ட தலைவர் உதய பூபதி தலைமையில் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், மாநகர தலைவர் டேவிட் ராஜா, மாவட்ட செயலாளர் உதயநிதி பாபு, மாநகர செயலாளர் முனிப்பாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img