கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.95க்குட்பட்ட LLYODS அவென்யூ பகுதியில் (NSMT 2023-24) நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் 1.09 கிலோ மீட்டார் தொலைவிற்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் அப்துல் காதர், அஸ்லாம் பாஷா, உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி பொறியாளர்கள் சபரிராஜ், சதீஷ்குமார், சரண்யா ஆகியோர் உள்ளனர்.



