fbpx
Homeபிற செய்திகள்மெட்ரோ ரயில் திட்டம், செம்மொழிப் பூங்கா, தொழில்நுட்ப நகரம் - கோவைக்கு முக்கிய திட்டங்களை அறிவித்த...

மெட்ரோ ரயில் திட்டம், செம்மொழிப் பூங்கா, தொழில்நுட்ப நகரம் – கோவைக்கு முக்கிய திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக பாராட்டு

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை கோவை காளப்பட்டி சாலை, ஷோன் ஹோட்டலில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலை மையிலும், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 2023&24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், அனைத்து தரப்பு கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கோவையின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தபடும்.

உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய மையமாக நிலைநாட்டுவதற்கும், பெருகி வரும் அலுவலக கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்கள் அமைக்கப்படும்.

கோவையில் மத்திய சிறைச்சாலை வளாக பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில், செம்மொழி பூங்கா அமைக்க ரூ.172.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் விடுதிகள் கட்டப்படும்.

கோவை மாநகரில் பூங்காக்கள், தூய்மையான தெருக்கள், சுத்தமான குடிநீர், பாதுகாப்பான போக்கு வரத்து, தொழிற்பூங்காக்கள், தரமான வீட்டு வசதி ஆகிய வசதிகளுடன் திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வதற்கும், அனைத்து மக்களின் பங்களிப்புடன் எழில்மிகு கோவை திட்டம் என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த எழில்மிகு கோவை திட்டம்.

வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், கோவை உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் அமைக்க 410 கோடி ரூபாய் ஒதுக்கீடு. கோவை மாநகராட்சி பகுதிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வை-பை வசதி.

போன்ற பல்வேறு முக்கியமான திட்டங்களை கோவைக்கு அறிவித்த முதலமைச்சருக்கும், நிதிதுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜ னுக்கும், பரிந்துரை செய்த தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கும் ஒருங்கி ணைந்த கோவை மாவட்ட திமுக சார்பிலும், கோவை மாவட்ட மக்கள் அனைவரின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்

முதலமைச்சர் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாளை, வருகின்ற ஜூன் 3ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை ஓராண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

அதில் ஆடம் பரங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அடங்கிய நூற்றாண்டு விழாவாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் பிறந்தநாளை ஒருங் கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் 100 நிகழ்ச்சிகள் நடத்தி டவும், ஏழை, எளியோருக்கு உதவும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி மக்கள் நலன் சார்ந்த நூற்றாண்டு விழா என்கிற அளவில் சிறப்பாக கொண்டாடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தி.மு.கழகத்தில் ஏற்கனெவே ஒரு கோடி உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், கழகத்தை மேலும் வலுப்படுத்த மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் மாபெரும் முன்னெடுப்பு தொடங்கப் பட்டுள்ளது.

ஏப்ரல் 3ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டு கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதிக்குள் நிறைவேற்றிட தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

கழகத்தை மேலும் வலுப்படுத்த மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் மாபெரும் முன்னெடுப்பை தொடங்கவும் ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழகத்தின் நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், பொதுக்குழு உறுப்பினர்கள், நகரக் கழக, பகுதிக்கழக, ஒன்றியக் கழக, பேரூர்க் கழகச் செயலாளர்கள், மண்டலத் தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், பாகம் முகவர்கள், செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள் அனைவரும், ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img