சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மற்றும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனத்தில் நேற்று (ஜூன் 11) நடந்தது. பதிவாளர் முனைவர் எஸ். கௌசல்யா வரவேற்றார்.
துணைவேந்தர் முனை வர் பாரதி ஹரிசங்கர் பேசுகையில், சிறுதா னியங்கள் ஊட்டச்சத்து களை உள்ளடக்கிய ஆற்றல் வீடாகும் என்று குறிப்பிட்டார்.
முனைவர் லவ்லின் ஜெரால்ட், முனைவர் எம்.சில்வியா சுபபிரியா அகியோர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்ப டுத்தினர்.
சிறப்பு விருந்தினர் கோவை எப்ஐசிசிஐ மூத்த துணைத் தலைவர் மீனா சுவாமிநாதன், சிறுதானியங்களின் நன்மை பற்றி எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினர் அறிவியலாளர், உணவு மற்றும் ஆரோக்கியத்திற்கான பத்மஸ்ரீ விருது பெற்ற முனைவர் காதர் வாலி பேசும்போது, சிறுதானியங்களின் வகைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி குறிப்பிட்டார்.
உணவு பழக்க வழக்க முறைகள் மற்றும் அதன் கால அளவுகள் பற்றியும் தெரிவித்தார். சிறுதானியங்களை தினசரி உணவில் ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிறுதானியங்கள் பல நோய்கள் வராமல் தடுக்கின்றன. செரிமான மண்டலங்களை சுத்தி கரிக்கச் செய்கிறது. மனிதனின் ஹார்மோன்கள் மற்றும் வேதிவினைகளை சமநிலையில் வைக்க உதவுகிறது என்றும் தெரிவித்தார். முனைவர் பிரேமலா பிரியதர்ஷினி நன்றி கூறினார்.