கோவை மாவட்டம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் கீழ், அன்னூர் வட்டம் குன் னத்தூரன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம், அன்னூர், எல்லப்பாளையம் ஏரியில் ஒஎம்எஸ் கருவி அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டம், பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தில் இருந்து ஆண்டொன்றிற்கு 1.50 டிஎம்சி உபரி நீரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 நீர் வளத்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குட்டைகள் நீர்நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தற்போது 99% பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின் றன. பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணை மற்றும் ஆற்று நீர் உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லக்கவுண்டம்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன் பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர், கட்டுமானப்பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன.
மின்சார தொடரமைப்புகள் அமைக்கும் பணி
எம்எஸ் குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கும், HDFE குழாய் பதிக்கும் பணிகள் 797.5 கி.மீ. நீளத்திற்கும் முடிக்கப்பட்டுள்ளன.
மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பிரதான மின் இணைப்புகளுக்கான மின்சார தொடரமைப்புகள் அமைக்கும் பணி 100% (மொத்த நீளம் 63.15 கி.மீ.) முடிவுற்றுள்ளது.
குளம் குட்டைகளிள் Outlett Management System பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்சமயம் 1044 எண்கள் பொருத்தப் பட்டுள்ளன (மொத்தம் 1045).
இத்திட்டத்திற்கு இதுவரை ரூ.1624.82 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள் ளது. 20-02-2023 முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை ஆறு நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதானக் குழாய்களுக்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.
நீரேற்று நிலையங்களின் இடையில் உள்ள கிளைக் குழாய்கள் மற்றும் 1045 குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள OMS கருவிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
இதுவரை 600 குளம் குட்டைகளில் சோதனை ஓட்டம் நிறைவு பெற்றுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு வரும் 258 குளங்களில் 122 குளங்களில் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனை ஓட்டப்பணிகளும் முடிக்கப்பட்டு, இத்திட்டமானது இந்த மாதம் இறுதியில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தே சிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அன்னூர், எல்லப்பா ளையம் உள்ளிட்ட குளங்களில் பொருத்தப்பட்டுள்ள OMS கருவி அமைப்புகளையும், குன்னத்தூரான் பாளையத்தில் நீரேற்று நிலையத் தில் தொட்டிகளுக்கு நீர் வெளியேற்றத்தை இயக்குவதற்கு தானியங்கி முறையில் மாஸ் டர் கண்ட்ரோல் சிஸ்டம் நிறு வப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, அத்திக்கடவு அவிநாசி திட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் முத்துசாமி, வட்டாட்சியர் காந்திமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.