கோவை மணியக்காரம்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தள்ளு வண்டிக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தள்ளுவண்டியில் வைத்திருந்த உணவகத்தை, கோவை மேயரின் கணவர் ஆனந்தகுமார் உத்தரவிரன் பேரில் அகற்றியதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில் ரங்கநாதன் என்பவர் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுக்கழிப்பிடம் அருகே ஆக்கிரமிப்பு செய்து தள்ளுவண்டி கடை நடத்தி வந்ததாகவும், இரவு நேரங்களில் அங்கு கடை நடத்தாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்பட்டு வருவதாகவும், இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்தும் பெண்கள் பாதிக்கப்படுவதாக, நாங்கள் வடக்கு மண்டல தலைவரிடம் புகார் அடிப்படையில் தள்ளு வண்டியை பறிமுதல் செய்ததாகவும், ஆனால் மேயர் மற்றும் மேயரின் கணவர் மீது தவறான செய்திகளை பரப்பி வருவதாக தெரிவித்தனர்.
மேலும் ரங்கநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.