fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் அர்த்தநாரீச வர்மா பிறந்தநாள் விழா

சேலத்தில் அர்த்தநாரீச வர்மா பிறந்தநாள் விழா

சேலம் கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மா கலை இலக்கிய பேரவை மற்றும் தெய்வீக தமிழ் சங்கம் அறக்கட்டளை இணைந்து சுதந்திரப் போராட்ட வீரர், மதுவிலக்குப் போராளி, சேலம் கவிச்சிங்கம் ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா பிறந்தநாள் விழா சேலம் தமிழ் சங்கம் அண்ணா நூலக முதல் தளத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி தலைமை தாங்கினார். இதில் மேனாள் மின்வாரிய செயற் பொறியாளர் ரத்தினம், மேனாள் துணை பதிவுத்துறை தலைவர் ராஜமாணிக்கம் கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மா திருஉருவ படத் தை மாலை அணிவித்து திறந்து வைத்து மரியாதை செய்தனர்.

இளங்கோவன், வடிவேல், முருகேசன், செல்லப்பன், ஆசைத்தம்பி, சந்திரசேகரன், முத்து மாணிக்கம், ரத்தினவேலு, பழனிசாமி, ரத்தினவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .ஆன்மீக சிற்பி சந்திரசேகர் கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் சரோஜா ஆறுமுகம், கலைச்செல்வி தின கரன், பரிமள ரோஜா மாரிமுத்து, பானுமதி தாசியப்பன், சந்திரா சேரமான் ஆதியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். கல்வியாளர் கோவிந்தராஜ் அனை வரையும் வரவேற்று வரவேற் புரையாற்றினார்.
இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாஜக மாநில தலைவர் ஆர்.பி.கோபிநாத், தெய்வீக தமிழ் சங்கம் தலைவர் புலவர் ராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தலைவர் பா.மா.ஆறுமுகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இறுதியில் கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மா கலை இலக்கிய பேரவை இணைச் செயலாளர் நரசிம்மன் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ அர்த்த நாரீஸ் வரர் வர்மா பேரன்கள் கலந்து கொண்டனர். அம்பிகாபதி, கி.விநாயகமூர்த்தி, கி.பழனிவேல், சி. சிங்காரவேலன் சி.மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img