fbpx
Homeபிற செய்திகள்அற்புத பெருவிழா கிறிஸ்தவ கூட்டம்

அற்புத பெருவிழா கிறிஸ்தவ கூட்டம்

கோவையில் இன்றும், நாளையும் அற்புத பெருவிழா கிறிஸ்தவ கூட்டம் நடக்கிறது. மோகன் சி.லாசரஸ் தேவசெய்தி வழங்குகிறார்.

கோவை ரத்தினபுரி கம்போர்ட் திருச்சபை மற்றும் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் இணைந்து நடத்தும் அற்புத பெருவிழா என்ற கிறிஸ்தவ கூட்டம் இன்று (சனிக்கி ழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கோவையில் நடைபெறுகிறது.

கோவை சின்னியம்பாளையத்தை அடுத்த தொட்டிப்பாளையம் ரோடு பிரிவு கோவை வித்யாமந்திர் பள்ளி அருகில் உள்ள மைதானத்தில் இந்த கூட்டம் மாலை 6 மணிக்கு நடக்கிறது.

இதில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி.லாசரஸ் கலந்து கொண்டு தேவசெய்தி வழங்கி, பிரார்த்தனை செய்கிறார்.

தேச நலன், தொழில் வளர்ச்சி, குடும்ப ஆசீர்வாதம், 2026 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றிற்காக சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்படுகிறது.

கோவையில் இந்த ஆண்டில் நடைபெறும் முதல் அற்புத பெருவிழா கூட்டம் என்பதால் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் கூட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் குழுவினர் மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த திருச்சபை போதகர்கள், போதகர் கூட்டமைப்பினர், அனைத்து திருச்சபை மக்கள் செய்துள்ளனர்.

இதேபோல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவை ரத்தினபுரியில் உள்ள கம்போர்ட் திருச்சபையில் நடைபெறும் சிறப்பு ஆராதனையிலும் மோகன் சி.லாசரஸ் கலந்து கொண்டு தேவசெய்தி வழங்குகிறார்.

படிக்க வேண்டும்

spot_img