நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூக்கல் கிராமத்தில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கூக்கல்தொரை அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், உதகை வட்டாரத் தலைவரும், நீலகிரி மாவட்ட YBA தலைவருமான ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பீமன், பெள்ளிராஜ், ஜலந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



