உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, கோவை காளப்பட்டி சந்திரமாரி இன்டர்நேஷனல் பள்ளியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

நேரு நகர் லயன்ஸ் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, டாக்டர் ராஜேந்திரன் டயாபட்டிக் சென்டர், டாக்டர் தங்கதுரை கோல்டு டென்டல் மருத்துவமனை, விருக்ஷா அக்குபஞ்சர் அகா டமி மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து நடத்திய இம்முகாமில் கண், விழித்திரை, ரத்தம், அக்குபஞ்சர் மற்றும் பல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட் டன. லயன் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆளுநர் செல்வராஜ், சூரி நந்தகோபால், பாஸ்கர், பத்மநாபன், பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

சங்கத் தலைவர் இன்ஜினியர் தேஜஸ்வினி மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.



