கோவை, பாலக்காடு சாலையில் அமைந்துள்ள ஏஜேகே கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உணவளிப்பு அறிவியல் மற்றும் விடுதி மேலாண் மையியல் துறை மற்றும் சமையல் கலைமன்றம் சார்பில், மகிழ்ந்து கொண்டாடுதல் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு பாரம்பரிய கேக் தயாரிப்புத் திருவிழா நேற்று முன்தினம் (11ம் தேதி) கல்லூரி வளாகத்தில் விமரிசையாகத் தொடங்கியது.
ஏஜேகே கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் முனைவர் அஜீத்குமார் லால்மோகன் முன்னிலையில், கல்லூரி யின் இயக்குநர் பேராசிரியர் பிந்துஅஜீத், கல்லூரி முதல்வர் முனைவர் ராஜூ, உணவளிப்பு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மையியல் துறைத் தலைவர், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனை வரும் ஒன்றிணைந்து இவ் விழாவில் பங்கேற்றனர்.
இவ்விழாவின் சிறப்பம்ச மாக, முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், செர்ரி, கிஸ்மிஸ், பேரீச்சம்பழம் உள்ளிட்ட 50 வகையான உலர்பழங்கள் மற்றும் பிறபொருட்கள் பழச்சாற்றில் கலந்து ஊற வைக்கப்பட்டன. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட இக் கலவை 45 நாட்கள் ஊறவைக்கப்பட்ட பின்னர் கேக் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும். இந்த ஆண்டு மொத்தம் 600 கிலோ பிளம் கேக்குகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒற்றுமை மற்றும் அமைதியை வலியுறுத்தும் வகையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ஒன்றி ணைந்து புறாக்களையும் பலூன்களையும் வானில் பறக்கவிட்டு தங்களது மகிழ்ச்சியையும் ஒற்றுமை உணர்வையும் வெளிப் படுத்தினர்.



