கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில், பெருங்குடல் மற்றும் மலக்குடலில் பெரிய கட்டிகள் பாதிப்புடன் இருந்த 10 நோயாளிகளுக்கு, நவீன எண்டோஸ்கோபிக் சப் மியூகோசல் டிசெக்ஷன் (ணிஷிஞி) சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இச்சிகிச்சையில், பெரிய கட்டிகள் குடலின் தசைப்பகுதியைச் சேதப்படுத்தாமல் முழுமையாக அகற்றப்படுகின்றன. இதனால், சில நோயாளிகளுக்கு அவசியமாகக்கூடிய பெரிய அறுவை சிகிச்சைகளையும், நிரந்தர செயற்கை மலப்பையையும் தவிர்க்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக, மலக்குடலில் பெரிய கட்டியுடன் இருந்த நோயாளிக்கு, மலக்குடலை அகற்றாமலும் நிரந்தர செயற்கை மலப்பை பொருத்தாமலும் கட்டி அகற்றப்பட்டது. மருத்துவ நிபுணர்கள், நோயியல் வல்லுநர்கள் உள்ளிட்ட குழுவினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.



