கோவை பாரதியார் பல்கலைக்கழக விலங்கியல் துறையும், தைவான் தேசிய கடல்சார் பல்கலைக்கழகமும் இணைந்து மீன், இறால் வளர்ப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக, பாரதியார் பல்கலைக்கழக விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் வே. ராமசுப்பிரமணியன் தைவான் சென்று, மீன், இறால் வளர்ப்புக்கான உயிர் உணவு உற்பத்தி குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மீன் வளர்ப்பு, இனப்பெருக்கம் மற்றும் உற்பத்தி
தொடர்பாகப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக பேராசிரியர் வே. ராமசுப்பிரமணியனுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பாராட்டுத் தெரிவித்தனர்.



