Homeபிற செய்திகள்கமலம் கார்னிவல்-2026 விருது வழங்கல்

கமலம் கார்னிவல்-2026 விருது வழங்கல்

சேலம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து தேவாலய வளாகம், போர்ட் பாரிஸ் ஹாலில் கமலம் கார்னிவல்-2026 மற்றும் எம்மீஸ் விருதுகள்-2026 வழங்கும் விழா நடைபெற்றது. எம்மீஸ் கார்டன் மறுவாழ்வு அறக்கட்டளை-சேலம் மற்றும் டெய்லி ஃப்ரெஷ் ஃப்ரூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக தலைவர்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

விழாவில், தலைமை நீதித்துறை நடுவர் கிருஷ்ண பிரியா மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். எம்மீஸ் கார்டன் சாரிட்டபிள் டிரஸ்ட் செகரட்டரி ஹேமா பிரைட், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் எம்மீஸ் சிறப்புப்பள்ளி, கமலம் மறுவாழ்வு மைய முதல்வர் ஹெலன் சோபியா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. 

படிக்க வேண்டும்

spot_img