Homeபிற செய்திகள்2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்: அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முருகமாறன் த.வெ.க.வில் இணைத்தார்

2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்: அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முருகமாறன் த.வெ.க.வில் இணைத்தார்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.முருகுமாறன் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:-

அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவலியோடு என்னை முழுமையாக விடுவித்துக்கொள்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் 100 சதவீத வெற்றி பெறக்கூடிய எனது சொந்த தொகுதியான காட்டுமன்னார்கோவில் தொகு தியை எனக்கு ஒதுக்காமல் தலைமை செய்த துரோகத்தை என் நெஞ்சம் மறக்க மறுக்கிறது. அ.தி.மு.க. என்னை வளர்த்த கட்சி, நான் வளர்த்த கட்சி என்ற நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்து நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் நேற்று தாராபுரத்தில் அமைச்சர் புஸ்சி ஆனந்தை நேரில் சந்தித்து தமிழகவெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1993-ல் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இணைந்த முருகுமாறன் தற்போது அமைப்புச்செயலாளராக இருந்து வந்தார். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் திட்டக் குடி (தனி) தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

படிக்க வேண்டும்

spot_img