Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் காந்தி ஜெயந்தி விழா

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் காந்தி ஜெயந்தி விழா

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா நடந்தது.
பல்கலைக்கழக வேந்தர் முனைவர் தி.ச.க. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்து, காந்தியடிகளின் அகிம்சை குறித்துப் பேசினார்.


சிறப்பு விருந்தினராக காந்தி நிகேதன் ஆசிரமத் தலைவர் முனைவர் ரகுபதி பங்கேற்று, அவினாசிலிங்கம் அய் யாவின் கல்வி பணிகளை எடுத்துரைத்தார்.


துணைவேந்தர் முனைவர் வை. பாரதி ஹரிசங்கர் காந்தியக் கொள்கைகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வலியுறுத்தினார்.

பதிவாளர் முனைவர் ஹை. இந்து வரவேற்றார். காந்திக்கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜி. சாந்தி நன்றி கூறினார்.
விழாவில் பேராசிரியர்கள், மாணவி கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.

படிக்க வேண்டும்

spot_img