கேஎம்சிஹெச் ராம்நகர் சிட்டி சென்டரின் 34-வது ஆண்டு விழா மற் றும் சீனியர் சிட்டிசன் ஹெல்த் கிளப்பின் 33-வது ஆண்டு விழா நடந்தது. கிளப்பில் 60 முதல் 90 வயது வரையிலான 400-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்க ளாக உள்ளனர்.
விழாவுக்கு கேஎம்சி ஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி தலைமை வகித்தார். கோவை வடக்கு மாநகர துணை காவல் ஆணையர் டாக்டர் பி. தங்கதுரை சைபர் பாதுகாப்பு குறித்து பேசினார். மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஸ்ரீநிதி நித்யானந்த், முதியோரின் உடல், மனநலம் குறித்து விளக்கினார். கிளப் ஒருங்கிணைப்பாளர் எஸ். ஹரிஹரன் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார்.
மூத்த குடிமக்களுக்கு உணவு, உடற்பயிற்சி ஆலோசனைகளுடன் சலுகை கட்டண மருத்துவ சேவைகள் வழங்கப்படுவ தாக டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி, இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி தெரிவித்தனர். டாக்டர் விஷ்ணுவர்தன் நன்றி கூறினார்.



