கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் கோவை சக்தி ஆட்டோ ஆன்சிலரி நிறுவனம் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் 6 அடி உயர நின்ற நிலையிலான வெண்கல திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, அதன் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.
கோவை என்ஜிஜிஓ காலனி இடிகரை சாலையில் உள்ள அசோகபுரம் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் 44 கோடி மதிப்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்தில் புதியதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்த மேம்பாலத்தின் ஆரம்ப இடமான அசோகபுரம் நான்கு வழிச்சாலை மற்றும் மேம்பால முடிவு பகுதியான ஆசிரியர் காலனி ஆகிய பகுதிகளில் ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்தில் தூண்களுக்கு இடையே மற்றும் ரவுண்டானா பகுதிகளில் செடிகள் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மேம்பாலத்தின் முடிவில் அமைக்கப்பட்டுள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் கோவை சக்தி ஆட்டோ ஆன்சிலரி நிறுவனம் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் சமூக பொறுப்பு நிதி மூலம் கார்டன் மற்றும் பராமரிப்பு உபகரணங்களுடன் மூன்றரை அடி உயர பீடத்தில் 6 அடி உயரத்தில் திருவள்ளுவர் நின்ற நிலையில் ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் எழுதுவது போன்ற வெண்கல சிலை அமைத்து கொடுத்துள்ளனர்.
சக்தி ஆட்டோ ஏன்சிலரி பிரைவேட் லிமிடெட் நிறுவனர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நிகழ்வில் சக்தி ஆட்டோ ஆன்சிலரி நிறுவன மேனேஜிங் டைரக்டர் எஸ் மோகன்ராஜ் மற்றும் தீபா மோகன்ராஜ், ராமு, சண்முகசுந்தரம், விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர். சக்தி ஆட்டோ ஆன்சிலரி நிறுவனத்தின் மெஷின் ஷாப் பொது மேலாளர் எஸ். செண்பகராஜன் அனைவரையும் வரவேற்றார்.
தொடர்ந்து அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் டாக்டர் இ. சேனாவரையன் திருவள்ளுவர் சிலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து திருவள்ளுவரின் பெருமைகள் மற்றும் திருக்குறளின் மேண்மைகளையும் எடுத்துக்கூறி தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் டி.டி.விக்டர் பால் வேதநாயகம் மற்றும் துணைத் தலைவர் எஸ் ஆனந்தகுமார், துடியலூர் காவல் நிலை ஆய்வாளர் விவேகானந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவின் நிறைவாக ரங்கம்மாள் காலனியைச் சேர்ந்த எஸ் விஜயன் நன்றியுரை வழங்கினார்.
கோவை சக்தி ஆட்டோ ஏன்சிலரி நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக தனது நிறுவன சமூக பொறுப்பு நிதி மாற்றுதிறனாளி குழந்தைகள் பராமரிப்பு மையம் நடத்தி வருவதுடன், ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அசோகபுரம் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தித் தந்துள்ளனர். என்ஜி ஜிஓ காலனியில் இரண்டு பயணியர் நிழற்குடை அமைத்துக் கொடுத்துள்ளனர். டீச்சர்ஸ் காலனி பகுதியில் குழந்தைகளின் விளையாட்டு பூங்கா அமைத்துக்கொடுத்துள்ளனர். மேலும் கோவில் திருப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் நிறுவன மேலாளர்கள், ஊழியர்கள் மற்றும் அசோக் குமார், ரங்கநாதன், தியாகராஜன், சக்கையன், மோகன், அசோகன், கணேஷ், சந்தோஷ் குமார், மணிகண்டன், பிரதாப், புஷ்பராஜ், நித்தின், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், சுதாகர், ஸ்ரீராம், நடராஜன், சதக்கத்துல்லா, மகேஷ் குமார், குமார் நிறுவன நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



