கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 116-வது பொதுப்பேரவை கூட்டம், கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குநருமான சு.இராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. முதன்மை வருவாய் அலுவலர் பெ.தியாகு வரவேற்றார்.
மேலாண்மை இயக்குநர் சு.இராமகிருஷ்ணன் பேசுகையில், கடந்த ஆண்டைவிட வங்கியின் வைப்புகள் ரூ.469.46 கோடியும், கடன் நிலுவை ரூ.432.68 கோடியும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். செல்லா சொத்து 2.74 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர லாபம் ரூ.15.59 கோடி ஈட்டப்பட்டு, உறுப்பினர்களுக்கு 5.5 சதவீத இலாப ஈவு வழங்கப்பட்டதாக கூறினார்.
2025-26 நிதியாண்டில் மாநில அளவில் இரண்டாவது சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பொது மேலாளர் ஜி.பி.ஆனந்தி ஆண்டு அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துடியலூர் விவசாய சேவா சங்கம் சார்பில் ரூ.1.67 கோடி நிதியும், ரூ.4.27 கோடி காப்பு நிதியும் வங்கிக்கு வழங்கப்பட்டது.



