
கோவை ஆர்.எஸ்.புரம் லேடிஸ் கிளப் சார்பில் தீபாவளி உட்சவ் 2026, செப்.19, 20-ம் தேதிகளில் காலை 10 முதல் இரவு 8 மணி வரை ஆர்.எஸ்.புரம் கிளப் வளாகத்தில் நடக்கிறது.


1952-ல் தொடங்கப்பட்ட இந்த மன்றத்தின் தலைவர் ஜெயஸ்ரீ பிரசாத் தலைமையில் விற்பனையை விழாவை, பூஜா சுதாகர் ராவ், சந்தீப் கவுர் ஆனந்த் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
விழாவில் புடவைகள், ஆடைகள், நகைகள், காலணிகள், உணவுப் பொருட்கள், வாழ்க்கை முறை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பண்டிகை பொருட்கள் விற்பனைக்கு இடம்பெற்றுள்ளன.

இதில் சுமார் 90 சதவீத அரங்குகளை பெண் தொழில்முனைவோர் அமைத்துள்ளனர்.
மேலும், பூச்சி மற்றும் கோர்ட் சிறுவானிக்கான தொண்டு அரங்குகளும் இடம்பெறுகின்றன.

சனிக்கிழமை கரோக்கி இசை நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தம்போலா நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.



