Homeபிற செய்திகள்கோவை காந்திபுரத்தில் அண்ணா சிலைக்கு கணபதி ராஜ்குமார் எம்பி, நா.கார்த்திக் மாலை

கோவை காந்திபுரத்தில் அண்ணா சிலைக்கு கணபதி ராஜ்குமார் எம்பி, நா.கார்த்திக் மாலை

பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாளையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாளையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு, கோவை பாராளுமன்ற உறுப்பினரும், மாநகர் மாவட்ட அவைத்தலைவருமான கணபதி ராஜ்குமார் தலைமையில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலையில், திமுக தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக், மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட ஏராளமானோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிகளில், தீர்மானக்குழு இணைச்செயலாளர் நாச்சிமுத்து, தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் நோயல் செல்வம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் தமிழ்மறை, மாநில தொழிலாளர் அணி துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், பகுதிக்கழக செயலாளர்கள், சேதுராமன், மா.நாகராஜ், தேவசீலன், மார்க்கெட் மனோகரன், டெம்போ சிவா, சிவகுமார், விஜயக்குமார், மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன், அம்பிகா தனபால், மரியராஜ், பிரவீன்ராஜ், அணிகளின் அமைப்பாளர்கள் அன்னம்மாள், வழக்கறிஞர் அன்புசெழியன், இரா.தனபால், அர்ஜூனன், சுரேஷ்குமார், வழக்கறிஞர் ஜிடி.ராஜேந்திரன், எல்பிஎப் டி.கிருஷ்ணன், வார்டு செயலாளர்கள் ராமநாதன், சசிக்குமார், குமரன் சுப்பிரமணி, மாவட்ட அலுவலக பொறுப்பாளர் ஆர்எஸ் புரம் பூபாலன், எல்பிஎப் விவேகானந்தன், மு.நல்லதம்பி, லாரா பிரேம்தேவ், அருண்குமார், பனை அருண், அழகுமலை, பூங்குயில் பாபு, வேலுமணி, வி.மணி, திவ்யா ராஜன், சிங்கை பிரபாகரன், அங்கன்னன், எஸ்.ஸ்ரீதர், சாரமேடு இஸ்மாயில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் ஈடு இணையற்ற மாபெரும் தலைவர் அண்ணா திமுக மாநில தீர்மானக் குழு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான நா.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கை:

காஞ்சி தந்த காவியத்தலைவர், உலகத்தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர், தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர்-

“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்று நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன் ,சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற, தமிழகத்தின் ஈடு இணையற்ற மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்தநாளான இன்று கொண்டாடி அவருக்கு புகழ் மாலை சூட்டுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img