Homeபிற செய்திகள்கோவை குமரன் கோட்டம் சுவாமிநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கோவை குமரன் கோட்டம் சுவாமிநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சூலூர் – திருச்சி சாலையில் அமைந்துள்ள கோவை குமரன் கோட்டம் அருள்மிகு சுவாமிநாத சுவாமி கோவிலின் 3-வது கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
அறுபடை முருகன் வடிவில் அமைந்துள்ள இந்த கோவில், கே.வி.குப்புசாமி – பத்மாவதி தம்பதியரின் கொடை மூலம் அமைக்கப்பட்டதாகும்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விநாயகர் வழிபாடு மற்றும் நவக்கிரக வேள்வியுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து வாஸ்து சாந்தி பூஜை, முதற்கால வேள்வி, 2-ம் மற்றும் 3-ம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றன.


இதில் ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை சேர்மன் கே.வி.குப்புசாமி, கலவை சச்சிதானந்த சுவாமிகள், வேலூர் பாலமுருகன் அடிமை சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதீனம், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என்.எம். சுகுமார், முன்னாள் அமைச் சர் செ.ம. வேலுச்சாமி, தமிழ்நாடு கல்குவாரி அசோசியேஷன் தலைவர் சின்னச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவை குமரன் கோட்டம் சுவாமிநாத சுவாமி மற்றும் ஆறுபடை வீட்டு முருகப் பெருமான்களின் மூர்த்தங்களுக்கு தமிழ்ச் சான்றோர்கள், ஆதீனங்கள், திருமடத் தலைவர்கள், சிவாச்சாரியார்கள் மற்றும் பண்ணிசையாளர்கள் ஒருங்கிணைந்து புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் கோவை புறநகர் பகுதியை சுற்றியுள்ள ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img