Homeபிற செய்திகள்மாநில அளவிலான கராத்தே போட்டியில் வள்ளலார் பள்ளி மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வள்ளலார் பள்ளி மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான கராத்தே போட்டி வள்ளலார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை.பெறாக் ஒகினவா கோஜி ரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி சேத்தியாதோப்பு பூதங்குடியில் உள்ள எஸ்.டி.சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இப்போட்டியில் சி.முட்லூர் மேல் அணுவம்பட்டு வள்ளலார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இதில் கட்டா பிரிவில் லக்சனா முதலிடமும் தியாசினி 2ம் இடமும் ரக்சிகா 3ம் இடமும் பெற்றனர். சண்டை பிரிவில் சபரிஷ் முதலிடமும் மாதேஷ், ரட்சிதன், பிரீத்திக்ஷா, சுதிக்க்ஷ ஆகியோர் 2 மற்றும் 3ம் இடங்களும் பிடித்து சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் தங்கராசு சண்முகம், தலைமை ஆசிரியை முத்துலட்சுமி, கராத்தே பொறுப்பு ஆசிரியை அபிதா பிரியதர்ஷினி, தவமணி, தனலட்சுமி, அபிநயா, ஜனனி, ஸ்ரீநதி, கவிநிஷா, கராத்தே பயிற்சியாளர் சென்சாய் ரெங்கநாதன் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img