Homeபிற செய்திகள்கோவை உடற்கல்வி ஆசிரியருக்கு ‘குருரத்தினா’ விருது வழங்கி கௌரவம்

கோவை உடற்கல்வி ஆசிரியருக்கு ‘குருரத்தினா’ விருது வழங்கி கௌரவம்

கல்வி, விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சமூகப் பணிகளில் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி, புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியரும் அர்ப்பணிப்புள்ள கல்வியாளருமான ஜி. ஆல்பர்ட் அலெக்சாண்டருக்கு மதிப்புமிக்க “குருரத்தினா விருது 2026” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

செவந்த் சென்ஸ் அமைப்பினால் ஒருங்கி ணைக்கப்பட்டு, மாற்றுத் திறனாளிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறு வனத்தால் வழங்கப்பட்ட “குருரத்தினா விருதுகள் 2026 ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் இவ்விருது வழங்கப்பட்டது.
கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் நடைபெற்ற விழா வில், தமிழ்நாட்டின் பிற்ப டுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத் குமார் முக்கிய விருந்தினர்கள் மற்றும் கல்வியாளர்கள் முன்னி லையில் இந்த விருதை வழங்கினார்.

விருது பெற்ற ஆல்பர்ட் அலெக்சாண்டர் உடற்கல்வி, விளையாட்டு, தேசிய மாணவர் படை, தலைமைத்துவப் பயிற்சி மற்றும் சமூகப் பணிகள் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் பல ஆண்டுகள் தம்மை அர்ப்ப ணித்துள்ளார். ஒழுக்கமும், ஆரோக் கியமும், சமூகப் பொறுப்பும் கொண்ட இளம் குடிமக்களை உருவாக்குவதில் இவரது அர்ப்பணிப்பு பலமுறை பாராட்டுகளையும் அங்கீகா ரத்தையும் பெற்றுத் தந்துள்ளது.விருதைப் பெற்றுக் கொண்ட அவர், அமைப்பாளர்கள், சக ஆசிரியர்கள், மாணவர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் கல்வி மற்றும் சேவைப் பயணத்தில் தமக்கு ஆதரவளித்த அனை வருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த விருது எனது சேவைக்கான அங்கீகாரம் மட்டுமன்றி, மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் இன்னும் கூடுதல் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற் றுவதற்கான ஒரு ஊக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img