Homeபிற செய்திகள்கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை அதிகரிக்க அமைச்சர் விஜய் பாலாஜி அறிவுறுத்தல்

கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை அதிகரிக்க அமைச்சர் விஜய் பாலாஜி அறிவுறுத்தல்

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை கைத்தறி துறை அமைச்சர் எம்.விஜய் பாலாஜி ஆய்வு செய்தார். கோவையில் ஸ்ரீ பால முருகன் விற்பனை நிலையம், ஹேண்ட்லூம்ஸ் ஆஃப் இந்தியா பை கோ-ஆப்டெக்ஸ் மற்றும் தமிழ்நாடு பஞ்சாலை கழகம் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்தல், சிறப்புத் தள்ளுபடி திட்டங்களை முறையாக செயல்படுத்துதல், கைத்தறி இரகங்களின் தரம் மற்றும் வடிவமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
2026-27-ம் ஆண்டில் கோவை மண்டலத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.28 கோடி விற்பனை இலக்கையும், தீபாவளி விற்பனை இலக்கான ரூ.10 கோடியையும் எய்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஆய்வின்போது அலுவலர்கள் செந்தில்குமார், ப.அம்சவேணி, சி.அய்யப்பன், சு.லட்சுமி பிரபா, விஜயானந்த், க.செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img