கனடாவின் ஒன்டாரியோ மாகாண சட்டசபையில், தில்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்க செயலாளரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான டாக்டர் ராம் சங்கர் ராஜாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவரை சட்டசபைக்கு வரவேற்ற மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி, சட்டத்துறையில் அவர் ஆற்றிவரும் சிறப்பான சேவை, நீதிக்கான அர்ப்பணிப்பு மற்றும் தமிழ் சமூகத்திற்காக மேற்கொண்டு வரும் பணிகளை பாராட்டி கவுரவித்தார்.
அரசு சார்பில் வழங்கப்பட்ட பாராட்டு சான்றில், அவரது தலைமைத்துவம் சட்டம் மற்றும் சமூக பிணைப்புகளை வலுப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



