Homeபிற செய்திகள்சித்த மருத்துவமனை, பள்ளி கட்டிடங்கள்திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள்

சித்த மருத்துவமனை, பள்ளி கட்டிடங்கள்திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள்

பொள்ளாச்சியில் செயல்படும் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில், ரூ.55.50 லட்சம் மதிப்பீட்டில் “புதிய சித்த மருத்துவ வெளி நோயாளிகள் பகுதி” கட்டடத்தினையும், ஆலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தலா ரூ.35.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும், எஸ். நல்லூர் ஊராட்சியில் ரூ.28.01 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தினையும் என மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ் முன்னிலையில், பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.

பின்னர், அமைச்சர்கள் சரணாலயம் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட பேட்டரி வாகனத்தை அரசு மருத்துவமனைக்கு வழங்கி, அதன் பயன்பாட்டினை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப் பனவர், பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ் ணசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் மைக்கேல் ஆண்டனி பெர்ணாண்டோ, இணை இயக்குநர் (மருத்துவ நலப் பணிகள்) மரு.சுமதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா, பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வடக்கு) மகேஷ்வரி, ஜெயஸ்ரீ, (தெற்கு) ஆனந்த், சந்தோஷம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.கவிதா, உதவி மருத்துவ அலுவலர் மரு.வித்யா தேவி, மருத்துவமனை கண் காணிப்பாளர் மரு.ராஜா, உட்பட பலர் உள்ளனர்.

இந்நிகழ்வில், அமைச்சர் சம்பத் குமார் பேசுகையில், இந்த சித்த மருத்துவப் பிரிவில் நீராவிக் குளியல் சிகிச்சை, நடைப்பயிற்சி இயந்திர வசதி, மிதிவண்டிப் பயிற்சி, மகளிர் நோய்களுக்கான சிகிச்சை, சர்க்கரை நோய் சிகிச்சை, இரத்த அழுத்தம் தொடர்பான சிகிச்சை, தோல் நோய்களுக்கான சிகிச்சை, வாத நோய்களுக்குச் சிறப்பு மருத்துவம், புதிய சித்த மருத்துவ வெளிநோயாளிகள் பிரிவு மூலம் பொதுமக்களுக்கு மேலும் சிறப்பான மற்றும் தரமான சித்த மருத்துவச் சேவைகள் கிடைக்கும், என தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img