கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனம் இயக்குபவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே போகும் நிலையில், சாலை விபத்துகளை தடுக்கவும் சாலை விதிகளை பின்பற்றவும் பல்வேறு விழிப்புணர்வுகளை போக்குவரத்து காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனால் நாளுக்கு நாள் இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை இயக்குவதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று கோவை பீளமேடு பகுதியில் இருந்து ஹோப்ஸ் வரை ஒரு பைக்கில் 4 கல்லூரி மாணவிகள் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். முறையாக தலைக்கவசம் அணியாமல் இந்த மாணவிகள் சாலையில் சென்றதை அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருவதுடன், ஆண்களுக்கு மட்டும் உடனுக்குடன் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். அவ்வாறு இந்த பெண்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



