கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில், அரிய பிறவி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு தாய், சேய்
இருவரும் காப்பாற்றப்பட்டனர்.
23 வயதான கர்ப்பிணி கடுமையான வயிற்றுவலி, தொடர் வாந்தியால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் தீர்வு கிடைக்காத நிலையில் கே.எம்.சி.ஹெச். அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் சிறுகுடல் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு அடைப்பை ஏற்படுத்தியதுடன், இரத்த நாளத்திலும் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்துறை மருத்துவக் குழுவினர் இணைந்து அவசர அறுவை சிகிச்சை செய்து, குடலின் இரத்த ஓட்டத்தை மீட்டனர். பின்னர் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமுடன் வீடு திரும்பினர்.
தொடர்ந்து மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தலைமையிலான மருத்துவ நிர்வாகம், டாக்டர்கள் ஸ்ரீ விஷ்ணு துளசிராமன், பிரியா பாரி, ஸ்ரீனிவாசன், தினேஷ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரை பாராட்டியது.



