கோவை மசக்காளிப் பாளையம் மணி மஹாலில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மெகா முகாம் நடந்தது.
முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, உதவி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் சுமார் 240 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்து மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கினர்.



