Homeபிற செய்திகள்கோவையில் ‘வனக்காப்பான்’ பிரத்யேக மையம் தொடக்கம்

கோவையில் ‘வனக்காப்பான்’ பிரத்யேக மையம் தொடக்கம்

சூழல் சுற்றுலா, வனப் பாதுகாப்பு மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கான இந்தியாவின் முதல் பிரத்யேக பாதுகாப்பு அங்காடியான ‘வனக்காப்பான்’, கோவை வடவள்ளி வெள்ளிங்கிரி நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
மலையேற்ற வீரர்கள், சூழல் சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் பயண உபகரணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த நேரடி விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ தடுப்பு, வனவிலங்கு கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஜிஎஸ்எம் கேமராக்கள், ட்ரோன், தகவல் தொடர்பு மற்றும் மீட்பு உபகரணங்கள் உள்ளிட்ட நவீன பாதுகாப்புத் தீர்வுகள் இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
இதுகுறித்து நிறுவனர் சுமித் சபர்வாள் கூறுகையில், தொழில்நுட்பம், சமூகப் பங்கேற்பு, விழிப்புணர்வு மூலம் வனப் பாதுகாப்பை வலுப்படுத்துவதே நோக்கம், என்றார்.

படிக்க வேண்டும்

spot_img