மேட்டுப்பாளையம் அருகே காரமடை எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் மழலையர் வகுப்பு மாணவ, மாணவிகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து வந்து விழாவில் பங்கேற்றது சிறப்பாக இருந்தது.
தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காரமடை எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர் ஆர்.பழனிசாமி, நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், முதல்வர் சசிகலா, செயலாளர் ராஜேந்திரன் அறங்காவலர் தாரகேஸ்வரி, பொருளாளர் ரத்தினசாமி, நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியைகள் பங்கேற்றனர்.



