Homeபிற செய்திகள்உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி,...

உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் – பரபரப்பு

1917ஆம் ஆண்டு துவக்கப்பட்டு நூற்றாண்டு கண்ட உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் 19 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இப்பள்ளியில் நேற்று சத்துணவு வழக்கம் போல் வழங்கப்பட்ட நிலையில் இன்று குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கெட்டுப் போன முட்டைகளை 19 மாணவர்கள் சாப்பிட்டதாக
கூறப்படுகிறது.

இந்த முட்டைகளை சாப்பிட்ட 100 மாணவர்களில் 19 பேருக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த பொறுப்பு தலைமை ஆசிரியர் சுரேஷ் உடனடியாக இந்த மாணவர்களை உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
12 வயதுக்குள் உள்ள 12 மாணவர்கள் பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் அவசர தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

12 வயதிற்கு மேல் உள்ள மாணவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வருவதாகவும், மாணவர்
களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத நிலையில், யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ
மனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் தெரிவித்தார். மேலும் தலைமை ஆசிரியர் சமீபத்தில்தான் கள்ளக்குறிச்சியிலிருந்து இப்பள்ளிக்கு மாறுதலாகி வந்துள்ள நிலையில் இன்று அவர் விடுப்பில் சென்றுள்ளார். இந்த பள்ளியில் சத்துணவு திட்ட ஒருங்கிணைப்பாளராக கீதா என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் தற்போது 265 மாணவர்கள் பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img