கோவையில் நடைபெற்ற கோயம்புத்தூர் சஹோதயா 11 பேர் கொண்ட கால்பந்து போட்டியில், 19 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் கேம்ஃபோர்டு சர் வதேசப் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது. கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் 20 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றன. இளம் வீராங்கனைகள் சிறப்பான திறமை, அணியாக செயல்படும் திறன் மற்றும் விளையாட்டு ஒழுக்கத்தை வெளிப்படுத்தினர்.
போட்டி முழுவதும் அபாரமாக விளையாடிய கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளி மாணவிகள், U-19 பெண்கள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். அகரம் பப்ளிக் பள்ளி இரண்டாம் இடத்தைப் பெற்றது. மேலும், போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கேம்ஃபோர்டு பள்ளி மாணவி துவரகா, சிறந்த கோல் கீப்பர் விருதைப் பெற்றார்.சாம்பியன் பட்டம் வென்ற மாணவிகள், பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வித் துறையினரை கேம்ஃபோர்டு பள்ளி தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை ரமேஷ் ஆகியோர் பாராட்டியதுடன், எதிர்காலப் போட்டிகளிலும் அணி தொடர்ந்து வெற்றிகளைப் பெற வேண்டும் என வாழ்த்தினர்.



