கோவை கொடிசியா பகுதியில் உள்ள இஸ்கான் திருக்கோவிலில் இன்று (4ம் தேதி) கிருஷ்ண ஜன் மாஷ்டமியை கொண்டா டும் விதமாக, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், சாதி, மதம், சமூகம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து கோடிக்கணக்கான மக்க ளால் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண் டாடப்படும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநட்சத்திர அவதார தினமான ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி, கோவை கொடிசியா வளாகம் அருகே அமைந் துள்ள இஸ்கான் ஸ்ரீ ஜகந்நாதர் (ஹரே கிருஷ்ணா) கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு மூன்று நாள் கொண்டாட்டங்களாக, செப்டம்பர் 3 முதல் செப் டம்பர் 5ம் தேதி வரை நடைபெறும்.

நிகழ்வில், இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா நடைபெற்றது. இஸ் கான் திருக்கோவிலின், மூத்த தலைவரான பக்தி விநோத ஸ்வாமி மகாராஜ் வழிகாட்டுதலின் கீழ் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண் டின் ஜன்மாஷ்டமி கொண் டாட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக, இன்று மாலை 7:30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ள திருவுருவ மூர்த்திகளுக்கான மாபெ ரும் அபிஷேகம் அமைய உள்ளது. இந்தப் புனித அபிஷேகம் தங்க முலாம் பூசப்பட்ட, வெள்ளி மற்றும் செம்புப் பாத்திரங்களால் தயாரிக்கப்பட்ட 1,008 கலசங்களைக் கொண்டு நடைபெற உள்ளது.

இந்த மங்களகரமான சடங் கிற்குப் பயன்படுத்தப் படும் நீர், இந்தியாவின் பல் வேறு பகுதிகளில் உள்ள புனித நதிகள் மற்றும் தீர்த்தத் தலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் இந்தியாவின் புனித யாத்திரைத் தலங்க ளின் புனிதத்தன்மை கோயம்புத்தூரில் நடை பெறும் இந்த சிறப்பு நிகழ்வில் ஒன்றிணையும்.

பாரம்பரிய வேத சடங்குகள், பக்திப் பாடல்கள் மற்றும் பகவா னின் திருநாமங்க ளின் கூட்டு சங்கீர்த்தனம் ஆகியவற்றுடன் அபிஷேக மும் நடைபெற்று வருகின்றது.
இந்த தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் குழந்தைகளுக்கு வேடமணிதல் மற்றும் பாரம்பரிய உடை போட் டிகள், ஓவியம் மற்றும் வண்ணப்படம் வரைதல், பாடல், கலாசார நிகழ்ச்சிகள், நாடகம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளது குறிப்பி டத்தக்கது.



