கோவை பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், சூலூர் குறுமைய அளவிலான கோ-கோ போட்டி அவிநாசி சாலையில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்றது.

சூலூர் குறுமையத்துக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளை ஒருங்கிணைத்த பள்ளி தாளாளர் பிரதேவ் ஆதிவேல், மாணவர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்க இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுவதாகவும் இதில் ஆயிரம் பேர் பங்கேற்றதாகவும் தெரிவித்தார்.



