சென்னை கீழ்ப்பாக்கம் குமரன் மருத்துவமனையில், 29 வயது ஐ.டி., ஊழியருக்கு குடலைத் தாங்கும் சவ்வுப் பகுதியில் இருந்த 20 x 20 x 18 செ.மீ., அளவிலான அரிய கட்டி, 20 மணி நேர மாரத்தான் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
வயிற்றுப் பகுதியில் உள்ள முக்கிய ரத்த நாளங்களுக்கு மிக அருகில் கட்டி அமைந்திருந்ததால், அறுவை சிகிச்சை மருத்துவக் குழுவினருக்கு சவாலாக இருந்தது. கட்டியை முழுமையாக அகற்ற கணையம், முன்சிறுகுடல் மற்றும் மண்ணீரல் ஆகியவை அகற்றப்பட்டன. அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கண்காணிப்பு கருவிகளின் உதவியுடன் கட்டி அகற்றப்பட்டது. சிகிச் சைக்குப் பின் 10 நாட்களில் நோயாளி வீடு திரும்பினார்.
பேராசிரியர் ரேலாவின் மருத்துவக் குழுவினர் மற்றும் குடல்-இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. கபில் நாகராஜ் தலைமையில், பல்வேறு துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சையை மேற் கொண்டனர். குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.பி. சிவ குமார் கூறுகையில், பல்துறை மருத்துவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியே வெற்றிக்கு காரணம், என்றார்.



