Homeபிற செய்திகள்காலநிலை மீள்திறன் சர்வதேச பயிலரங்கம்

காலநிலை மீள்திறன் சர்வதேச பயிலரங்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் சார்பில், இந்தியாவில் காலநிலை மீள்திறன் கொண்ட நகர்ப்புற சூழலமைப்புக்கான தகவலமைப்பு முறைகள் குறித்த சர்வதேச பயிலரங்கம் நடந்தது.
வேளாண்மைப் பொறியியல் கல்லூரி முதல்வரும், பயிர் மேலாண்மை இயக்ககத்தின் பொறுப்பு இயக்குநருமான முனைவர் பி.ராஜ்குமார் பயிலரங்கை தொடங்கி வைத்தார். இயற்கை வள மேலாண்மை இயக்குநர் முனைவர் எஸ்.கார்த்திகேயன், நகர்ப்புற காலநிலை சவால்களை எதிர்கொள்வதில் இயற்கை அடிப்படையிலான தீர்வு களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மையத்தின் தலைவர் முனைவர் ப. முரளி அர்த்தனாரி வரவேற்றார். திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் முனைவர்
எ.பரமேஸ்வரி திட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கினார்.

படிக்க வேண்டும்

spot_img