சென்னை ஆழ்வார்பேட்டை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், உலகின் முதல் ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார். பேராசிரியர் டாக்டர் அமர் அகர்வால் உருவாக்கிய இச்சிகிச்சை முறையின் மூலம், கருவிழித் தழும்பு, சீரற்ற கருவிழி உள்ளிட்ட சிக்கலான பார்வைக் குறைபாடுகளுக்கு இயற்கையான கருவிழியைப் பாதுகாத்து பார்வையை மேம்படுத்த முடியும். இதுவரை 5,000க்கும் மேற்பட்டோர் இச்சிகிச்சையால் பயனடைந்துள்ளனர் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. விழாவில் டாக்டர் அமர் அகர்வால், டாக்டர் மனோஜ் கத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



