கோவை பி.எஸ்.ஜி கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் 60-வது ஆண்டு பி.எஸ்.ஜி கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரளா மாநில மின்சார வாரியம், ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு, இந்தியன் வங்கி, ஓ.என்.ஜி.சி அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

நேற்று நடந்த போட்டிகளில் ஓ.என்.ஜி.சி 89-68 என்ற புள்ளிக்கணக்கில் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தையும், இந்தி
யன் வங்கி 87- 68 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய கப்பல் படையையும், கேரளா மின்சார வாரியம் 71 -60 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய விமானப்படையையும் வீழ்த்தின.
இன்று நடைபெறும் அரையிறுதியில் கேரளா மின்சார வாரியம் -ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு, இந்தியன் வங்கி -ஓ.என்.ஜி.சி அணிகள் மோதுகின்றன. போட்டிகள் வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகின்றன.



