பள்ளி கல்வி துறையால் நடத்தப்படும் கோவை மாவட்ட `அ’ குறுமைய போட்டிகள் பாரதியார் பல்கலைக்கழகத்தில் துவங்கியது. இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல் இரண்டு நாட்கள் பெண்களுக்கான போட்டிகளும் அடுத்த மூன்று நாட்கள் மாணவர் களுக்கான போட்டிகளும் நடை பெற்றது. குரு மைய போட்டிகள் 14 வயது, 17 வயது, 19 வயது உட்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளாக பிரித்து மாணவ மாண வியருக்கு நடைபெற்றது
இதில் கிக்கானி பள்ளி கால்பந்து, கைப்பந்து (ஹான்ட்பால்), ஹாக்கி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி போட் டியில் பங்கெடுத்த 272 மாணவ, மாணவியர் பதக்கங்களைப் பெற்ற னர். கால்பந்து, ஹாக்கி, கைமப்பந்து (பிகிழிஞிஙிகிலிலி), பிரிவுகளில் மாணவ, மாணவிகள் வெற்றி கோப்பைகளை கைப்பற்றினர்.
இதில் சிறப்பம்சமாக கால்பந்து போட்டியில் கடந்த 25 வருடங் களாக கிக் கானி பள்ளி ஏதோ ஒரு பிரிவில் வெற்றி பெற்று கால்பந்தாட்டத்தில் முடிசூடா மன்னனாக திகழ்கின்றது. இந்த முறை 25 வது ஆண்டு வெற்றியை கொண்டாடும் விதமாக கால்பந்தில் ஆறு பிரிவுகளிலும் பதக்கங் களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாக்கியிலும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ச் சியாக வெற்றி பெறுவது குறிப்பிடத் தக்கது.
மாணவிகள் கால்பந்து ஆட்டத் தில் ஆர்னிகா , இலக்கியா, அமிர்தா, ஸ்ரீமதி, தீர்த்தா, ஜெனிலியா, அதிர்ஷ்ட, ஹரி வர்ஷினி, சாருநேத்ரா, இந்து, இளமதி, ஸ்வேதா ஆகியோ ரும் ஷாக்கியில் கனிஷ்மா, மதுமொகஷின் பானு, ஹாசினி, யாழினி, துர்கா, சாரு நெத்ரா, பவாணிதா, கலைவாணி ஆகியோரும் ஹான்ட்பால் போட்டியில் அனுஸ்ரீ, சஹானா, சாய் ஸ்ரீ, மதுமிதா, மோகனபிரியா, கௌசிகா, ஹிமயா, தர்ஷினி, நர்மதா, தர்ஷனா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மாணவர்கள் கால்பந்தாட்டத் தில் சஃபான், உதய், ஜாசிம், ராகவன், ஜெய் மூர்த்தி, கிருஷ்ணா, அஸ்லான், ஜெகதீஷ், அஜய், பாண்டி மற்றும் கோல்கீப்பர்கள் தருண், சாய் விக்னேஷ் ஆகியோரும் ஷாக் கியில் விக்னேந்திரன், வினோத், சௌந்தர்யன், பிரியன், விக்னேஷ், மருது, மனோஜ், சபரி, தணிஸ்க், ஹிதிஸ், சோம்நாத், ஆகாஷ் ஆகி யோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினர்.
மாணவர்களுக்கான கைப்பந்து போட் டியில் ஹெம் பிரகாஷ், ஹரி பாலன், கைலாஷ், ஹரிசுதன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கிக்கானி பள்ளி மாணவ மாணவி கள் கால்பந்து மற்றும் ஹாக்கியில் மாநில, தேசிய போட்டிகளிலும் பங்கு பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தாளாளர் துஷார் கிக்கானி, தலைமை ஆசிரியர் ஆனந்தி, பயிற்சியாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஜேம்ஸ் கென் னடி, உடற்கல்வி இயக்குனர் சிபி, உடற்கல்வி ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற் றோர்கள்
ஆகியோர் பாராட்டினர்.



