Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்-& போட்டி

தூத்துக்குடியில் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்-& போட்டி

தூத்துக்குடி எக்ஸலண்ட் டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி சென்னை சில்க்ஸ்–ஸ்ரீகுமரன் தங்க மாளிகை வளாகத்தில் நடந்தது.
ஆண்கள், பெண்களுக்கான கியோருகி, பூம்சே பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் ஊக்குவிப்புடன், இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்கத்தின் இணைப்பில் போட்டிகள் நடைபெற்றன.
தொடக்க விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் என்.ஏ.ரத்தின ராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் டாக்டர் எஸ்.கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். ஏற்பாடுகளை சங்க தலைவர் பி.கோபாலகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் எஃப்.ஜோசப் ஆண்டனி பியோ ஜெஃப்ரிஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். போட்டிகளை என்.ரவீந்திரன் ஒருங்கிணைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img