Homeபிற செய்திகள்கோவையில் நாளை இலவசசெயற்கை மூட்டு வழங்கும் விழா

கோவையில் நாளை இலவசசெயற்கை மூட்டு வழங்கும் விழா

கோவையில் நாராயண் சேவா சன்ஸ்தான் சார்பாக நாளை (ஆகஸ்ட் 9) மாபெரும் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு இந்தியா மட்டுமின்றி ஆப்ரிக்க நாடுகளிலும். மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கோவையில் இரண்டாவது முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை மூட்டு வழங்குவதற்கான அளவீட்டு முகாம் கடந்த மே மாதம் நடைபெற்றது..
இந்நிலையில் அளவீடு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கை மூட்டுகளை பொருத்துவதற்கான முகாம், நாளை (ஆகஸ்ட் 9) சோமையாம்பாளையம் கே.என்.ஜி.புதூர் பகுதியில் உள்ள மகேஸ்வரி பவன் அரங்கில் நடைபெற உள்ளது..
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி அரங்கில் நடைபெற்றது. இதில், முகாம் ஒருங்கிணைப்பாளர் அச்சால் சிங் பட்டீ, சமூக செயற்பாட்டாளர் சந்தோஷ் முந்த்ரா ஆகியோர் கூறுகையில், கோவையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த முகாம் நடைபெறுவதாகவும், முன்னதாக கடந்த மே மாதம் அளவீடு செய்யப்பட்டவர்களுக்கு செயற்கை மூட்டுகள் தயார் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு பொருத்த இருப்ப தாகவும் தெரிவித்தனர்.
இந்த முகாமை மாட்ரூ ஸ்ரீ சாந்தாபென் திரிபுவந்தாஸ் பட்டேல் (Matrushree Shantaben Tribhuvandas Patel Charitable Trus) அறக்கட்டளையுடன் இணைந்து நாராயண் சேவா சன்ஸ்தான் நடத்துவதாக தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிகள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தன்னம்பிக்கையுடனும் சுயநிறைவு வாழ்க்கையுடனும் வாழ உதவும் நோக்கில், தேசிய விருது பெற்ற சமூக சேவை அமைப்பான நாராயண் சேவா சன்ஸ்தான் இந்த முகாமை இரண்டாவது முறையாக கோவையில் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து முகாம் தொடர்பான தகவல் போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டது. இதனை அச்சால் சிங் பட்டீ, சமூக செயற்பாட்டாளர் சந்தோஷ் முந்த்ரா, மகேஷ்வரி சபா தலைவர் தாமோதர் பிரசாத் சோமானி, ,ஜிதேந்திரா புகாலியா, பிரதீப் கர்னானி ஆகியோர் வெளியிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img